திருவள்ளூர்
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
|பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
பொன்னேரி நகராட்சி பகுதியில் அடங்கிய சின்னகாவனம் கிராமத்தில் வசிப்பவர் சார்லஸ் என்கின்ற முருகன் (வயது 35). இவர் வேலை சம்பந்தமாக விடதண்டலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் பழவேற்காடு நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தார். அப்போது பரிக்கப்பட்டு கிராமம் அருகே எதிர் திசையில் பொன்னேரி நோக்கி வந்த நபர் முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இவர் பொன்னேரில் தங்கி இருந்து கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.
இந்நிலையில் பொன்னேரி கள்ளுகடைமேடு பகுதி சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலாஜி உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.