திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் சாவு
|கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் சாவுகும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். இவருக்கு மேனகா (45) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தச்சூரில் இருந்து புதுவாயல் நோக்கி மோட்டார் சைக்கிளில் குமார் சென்று கொண்டிருந்தார். போரக்ஸ் அருகே மோட்டார் சைக்கிள் செல்லும் போது அதே திசையில் கவரைப்பேட்டை நோக்கி முன்னால் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.