< Back
மாநில செய்திகள்
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
8 Aug 2023 2:42 PM IST

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தல் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சி, லைப்ரரி தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). தாம்பரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இதைபோல உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (30). விவசாயி. நேற்று முன்தினம் இரவு கனகராஜ் வேடபாளையத்தில் இருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். குமார் உத்திரமேரூரில் இருந்து வேடபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேடபாளையம் அருகே இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

பலி

இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக பலியானார். குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்