கடலூர்
திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
|திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிாிழந்தாா்.
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் ராஜா(வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நெடுங்குளத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். பெருமுளை சமத்துவபுரம் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவருடைய மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ராஜா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் வெங்கடேசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கசேடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.