< Back
மாநில செய்திகள்
காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கொத்தனார் பலி
கடலூர்
மாநில செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கொத்தனார் பலி

தினத்தந்தி
|
4 April 2023 12:15 AM IST

காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜேந்திரசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 35). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் காலை கட்டிட வேலைக்காக மோட்டார் சைக்கிளில் எய்யலூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். பூவிழுந்தநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், திருமுருகன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் திருமுருகன் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆயங்குடியை சேர்ந்த ஆனந்தபாபு என்பவரும் பலத்த காயமடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திருமுருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனந்தபாபு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான திருமுருகனுக்கு மஞ்மாதா(26) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்