< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
சோமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
|18 March 2023 2:28 PM IST
சோமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
சென்னை அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் தர்காஸ் சாலை கிஷ்கிந்தா எதிரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த லாரி வெங்கடேசன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் உடல் இடுப்புக்கு கீழ் நசுங்கி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.