< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளை திருடியவர் போலீசில் ஒப்படைப்பு
|7 Sept 2022 12:01 AM IST
ஜெயங்கொண்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கணபதி நகரை சேர்ந்தவர் பாபு. இவர் பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று தனது கடை அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்று உள்ளார். இந்தநிலையில் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து சூர்யா மீது சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.