< Back
மாநில செய்திகள்
வடலூரில் மோட்டாா் சைக்கிள் திருடியவர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

வடலூரில் மோட்டாா் சைக்கிள் திருடியவர் கைது

தினத்தந்தி
|
24 March 2023 12:15 AM IST

வடலூரில் மோட்டாா் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

வடலூர்,

வடலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் கண்ணன் மகன் ஜெயக்குமார் (வயது 52). சம்பவத்தன்று இவர், தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் மதியம் வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வடலூர் சபை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்ற ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர், விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் ராமாபுரம், வயலூரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஏசுராஜன் (40) என்பதும், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஏசுராஜனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்