< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
|11 Oct 2023 12:15 AM IST
தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). லாரி டிரைவர். இவர் சின்னகண்ணுபுரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்த ஆனந்த் மகன் மணிகண்டன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.