< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
|7 Feb 2023 1:01 AM IST
மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த குணசேகரனின் மகன் அய்யப்பன். இவர் கடந்த மாதம் 25-ந்் தேதி திருமானூர் சந்தையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா கார்குடியை சேர்ந்த ரவியின் மகன் ராஜ்குமார்(வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் வந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆதிபடுத்தி சிறையில் அடைத்தனர்.