< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

தினத்தந்தி
|
19 Oct 2023 2:15 AM IST

சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சிறுமுகை அருகே பெத்திகுட்டை பகுதியில் கந்தசாமி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் பேக்கரிக்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சத்தியமங்கலத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 35) என்பவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்