< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
|5 Oct 2023 8:33 PM IST
பெருமாள்பட்டு அருகே மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் முகமது பேரோஸ் (வயது 42). இவர் கடந்த 2-ந்தேதி இரவு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து முகமது பேரோஸ் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் பட்டாபிராம் தண்டுரை தேவர் தெருவை சேர்ந்த ராஜசேகர் (வயது 28) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.