< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது
|9 July 2023 1:56 AM IST
மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
திட்டக்குடி,
ஆவினங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் தொளார் கைகாட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெண்ணாடம் சோழ நகர, பூங்கா பள்ளிக்கூட தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் சூரியமூர்த்தி(வயது 28) என்பதும், இவர் ஆவினங்குடி, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் என்பதும் தொியவந்தது. இதையடுத்து சூரியமூர்த்தியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.