< Back
மாநில செய்திகள்
திருக்குறுங்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

திருக்குறுங்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
13 Oct 2023 1:07 AM IST

திருக்குறுங்குடியில் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

ஏர்வாடி:

திருக்குறுங்குடி லெவஞ்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் மகன் சபரி. கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இரவில் இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்