< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிள் திருட்டு
|20 Jan 2023 12:15 AM IST
மோட்டார்சைக்கிள் திருட்டு
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே உள்ள அழிக்கால் மாதாநகரை சேர்ந்தவர் ஆன்றனி ஜெனிபால் (வயது 46), மீனவர். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்தி விட்டு மீன்பிடிக்கச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர் மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆன்றனி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.