< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
3 Oct 2023 1:15 AM IST

திண்டுக்கல்லில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.

திண்டுக்கல் நாகல்நகர் சீனிராவுத்தர் தெருவை சேர்ந்த குருசாமி மகன் கார்த்திக் (வயது 24). தனியார் ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் நேற்று காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்