< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு
|27 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் (வயது52). இவர் தக்கலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு வந்த ராஜரெத்தினம் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தினார். மாலையில் கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜரெத்தினம் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.