< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
18 Sept 2023 12:15 AM IST

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழித்துறை:

மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் மணிபாலன் (வயது 28). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணிபாலன் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்