< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
2 Sept 2023 3:26 AM IST

மோட்டார் சைக்கிள் திருட்டு

திங்கள்சந்தை:

திருவிதாங்கோடு அருகே உள்ள வட்டம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாரிக்கண்ணன். இவருடைய மகன் காளிதுரை (வயது 22),தொழிலாளி. சம்பவத்தன்று இவர் நெய்யூர்-கருங்கல் சாலையில் உள்ள பால்தெருவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க அந்த பகுதியில் இருந்த கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காளிதுரை கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்