< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ராணுவ வீரர் வீட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு
|21 Feb 2023 12:15 AM IST
வத்தலக்குண்டு அருகே ராணுவ வீரர் வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றார்.
வத்தலக்குண்டு அருகே மேலகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. ராணுவ வீரர். நேற்று முன்தினம் அவரது மகன் சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை வைத்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.