< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிப்பு

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள பிரமனூரை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 50). விவசாயியான இவர் தற்போது திருப்புவனத்தில் உள்ள பழைய பஜார் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் தீயில் எரிந்த நிலையில் சேதம் அடைந்து இருந்தது. மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அய்யப்பன் இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்