< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
குளச்சல் அருகேமோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
|14 Dec 2022 2:44 AM IST
குளச்சல் அருகேமோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் அய்யம்பாறைவிளையை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது37). ரெயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பெரியாபள்ளியை சேர்ந்த நிதின் (35) என்பவருக்கும் இடையே கோவில் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தகுமார் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலையில் பார்த்த ேபாது மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் நிதின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.