< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
|13 Sept 2022 6:15 PM IST
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி கடைவிளையை சேர்ந்தவர் அஜய்சிங் (வயது20), கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே விரைந்து வந்து தீயை அணைத்தார். அதற்குள் அந்த மோட்டார் சைக்கிள் மிகவும் சேதமடைந்தது.
இரவில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.