< Back
மாநில செய்திகள்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி
சென்னை
மாநில செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

தினத்தந்தி
|
22 July 2022 9:31 AM IST

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. 14 மோட்டார் சைக்கிள்கள் கலந்து கொண்ட இந்த பேரணி, சென்னையில் இருந்து புறப்பட்டு செகந்திராபாத் சென்றடையும். மோட்டார் சைக்கிள் பேரணியை ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஈஸ்வரராவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் டி.ஐ.ஜி. சந்தோஷ் சந்திரன், துணை முதன்மை பாதுகாப்பு கமிஷனர் லூயிஸ் அமுதன் மற்றும் சென்னை கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்