< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள், மொபட்டுக்கு தீ வைப்பு
|4 Oct 2022 1:00 AM IST
வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள், மொபட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு துங்க சென்றார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பன் வியாபாரி முருகன், தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மீது யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 2 வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து எரியோடு போலீசில் அவர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள், மொபட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.