< Back
மாநில செய்திகள்
சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; வாலிபர் பலி

தினத்தந்தி
|
20 Aug 2022 2:47 PM IST

சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சுங்குவார் சத்திரம் அடுத்த செல்லம் பட்டிடை பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி முருகன் வந்த மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பாலியான முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்