செங்கல்பட்டு
அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; 2 பேர் பலி
|அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் சஞ்சய் (வயது 17). அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் சஞ்சய் (17). நேற்று முன்தினம் சஞ்சய், மற்றொரு சஞ்சய் என இருவரும் தொழுப்பேட்டில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அச்சரப்பாக்கம் அடுத்த தேன்பாக்கம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மினி லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சஞ்சய், மற்றொரு சஞ்சய் என இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது சம்பந்தமாக தகவல் கிடைத்ததும் அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.