< Back
மாநில செய்திகள்
தொழிலாளியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு
தேனி
மாநில செய்திகள்

தொழிலாளியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு

தினத்தந்தி
|
8 Oct 2023 4:00 AM IST

கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் மோட்டார் சைக்கிள் பறித்து சென்ற மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 27). இவர், திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து எழுவனம்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெரியகுளத்திற்கு வந்து கொண்டிருந்தார். செங்குளத்துப்பட்டி பிரிவு அருகே சென்றபோது சாலையின் குறுக்கே சுமார் 25 வயது வாலிபர் கருப்புச்சட்டை, லுங்கி அணிந்து கொண்டு நின்றார். அவர் சவுந்தரபாண்டியன் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை எடுத்து சென்றார்.

இதற்கிடையே அருகே உள்ள பாலத்திற்கு அடியில் இருந்து 3 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சவுந்தரபாண்டியனிடம் பணம் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், 4 பேரையும் தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பின்னர் ஆட்களை அழைத்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அந்த மர்ம நபர்கள் கொண்டு சென்றனர். இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டாா் சைக்கிளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்