< Back
மாநில செய்திகள்
எண்ணூரில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
சென்னை
மாநில செய்திகள்

எண்ணூரில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

தினத்தந்தி
|
7 Aug 2023 11:50 AM IST

தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வாலிபர் பலி

எண்ணூர் தாழங்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 35). இவர், போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். எண்ணூர் கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

சென்னை வில்லிவாக்கம் செட்டி தோப்பு தெருவைச் சேர்ந்தவர் தரணி சிங்கன் (76). இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் எஸ்டேட் முதல் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த முதியவர் தரணி சிங்கன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான பெருமாள் (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்