திருவள்ளூர்
மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதல்; கோவில் பூசாரி பலி
|மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள்-கன்டெய்னர் லாரி மோதலில் கோவில் பூசாரி பலியானார்.
சோழவரம் அடுத்த மணலிபுதுநகர் அருகே உள்ள சின்ன ஈச்சங்குழி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 44). இவர் புதியஎருமைவெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10-ந்தேதி கோவில் பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பின்னர், மீஞ்சூர்-சென்னை வெளிவட்ட சாலையில் பூதூர் கிராமம் அருகே வந்த போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் நிலைத்தடுமாறி சரவணன் கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்த சரவணனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.