< Back
மாநில செய்திகள்
மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி

தினத்தந்தி
|
6 Jun 2023 3:02 PM IST

மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் காவாங்கரை திருநீலகண்டன் நகரைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 40). சுகன்யா அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலைக்கு வந்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் தாமரைப்பாக்கம்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் வாணியன்சத்திரம் அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று மோட்டார் சைக்கிளின் குறுக்கே சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுகன்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சுகன்யாவின் தந்தை ராஜி நேற்று வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்