சென்னை
மீனம்பாக்கத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; இசை கலைஞர் சாவு
|மீனம்பாக்கத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இசை கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ராயப்பேட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வர் (வயது 18). இசை கலைஞர். இவர் நேற்று காலை தனது நண்பனான கல்லூரி மாணவன் கேசவன் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பல்லாவரம் சென்றுவிட்டு மீண்டும் ராய்பேட்டைக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது மீனம்பாக்கம் சிக்னல் அருகே முன்னால் சென்ற வேன் திடீரென திரும்பியதால் மோட்டார் சைக்கிள் வேன் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி ஏறியப்பட்டு சாலையில் மயங்கி விழுந்தனர். இது குறித்த தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஈஸ்வர் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். பின்னால் அமர்ந்து வந்த கேசவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநர் அண்ணாமலையை (62) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.