< Back
மாநில செய்திகள்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி

தினத்தந்தி
|
27 Aug 2023 11:52 PM IST

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலியானார்.

கந்தர்வகோட்டை அருகே பழைய கந்தர்வகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 53). இவர் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன் பட்டி அருகில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் குருமூர்த்தி சென்று கொண்டிருந்தார். அப்போது ேடால்கேட் அருகில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது குருமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்