< Back
மாநில செய்திகள்
தியாகதுருகம் அருகே                                         லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி

தினத்தந்தி
|
28 Oct 2023 12:15 AM IST

தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பலியானார்.

தியாகதுருகம்,

புதுச்சேரி கலிதீர்த்தான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் பொற்செழியன் (வயது 24). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு புறப்பட்டார். தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் பிரிவு சாலை அருகே சென்ற போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொற்செழியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் அம்சவேணி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்