< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கத்திமுனையில் மிரட்டி காதல் ஜோடியிடம் மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறிப்பு
|14 March 2023 11:48 AM IST
செங்குன்றம் அருகே கத்திமுனையில் மிரட்டி காதல் ஜோடியிடம் மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றத்தை அடுத்த சோழவரம் குதிரை பள்ளத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது 20 வயதான காதலியுடன் செங்குன்றத்தை அடுத்த எல்லையம்மன்பேட்டை சர்வீஸ் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள், காதல் ஜோடியிடம் கத்திமுனையில் மிரட்டி இருவரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.