விருதுநகர்
வக்கீலிடம் மோட்டார்சைக்கிள், செல்போன் பறிப்பு
|வக்கீலிடம் மோட்டார்சைக்கிள், செல்போைன பறித்து சென்றனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது22). வக்கீலான இவர் மேலேந்தல் பகுதியில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி தினேசிடம் இருந்த செல்போன் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தினேஷ் உடனடியாக நரிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நரிக்குடி போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை விரட்டி சென்றனர். அந்த மர்ம நபர்கள் மானாசாலை அருகே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு சென்றனர். பின்னர் சீனி காரனேந்தல் விளக்கு பகுதியில் அவர்களில் ஒருவரான 19 வயது வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.