கடலூர்
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: ஜாமீனில் வந்த 3 பேர் படுகாயம்
|வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிக்கொண்ட விபத்தில் ஜாமீனில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநத்தம்,
வேப்பூர் அருகே உள்ள பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் கோபு (வயது 32). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணமூர்த்தி(22), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன்(26) ஆகியோரும் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் கோபு உள்ளிட்ட 3 பேரும் நேற்று காலை விருத்தாசலம் நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். வேப்பூர் அருகே கண்டப்பங்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அவ்வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோபு உள்ளிட்ட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம், பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.