< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் சாகசம்: கைதான 3 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாகசம்: கைதான 3 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

தினத்தந்தி
|
18 Sept 2022 2:29 PM IST

சென்னை அண்ணா சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு கைதான 3 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் கடந்த 8-ந்தேதி அன்று மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று 5 மாணவர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். அபாயகரமான முறையில் அவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதை வாகன ஓட்டி ஒருவர் செல்போன் மூலம் 'வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

இதையடுத்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 2 மாணவர்கள் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அவர்கள் 2 பேரையும் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோன்று இந்த வழக்கில் கைதான சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் மீதும் இடைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதுபோன்று மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடக் கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்