< Back
மாநில செய்திகள்
மோட்டார் திருட்டு; 2 வாலிபர்கள் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மோட்டார் திருட்டு; 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
3 Sept 2023 2:04 AM IST

திருவோணம் அருகே மோட்டாரை திருடியதாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஒரத்தநாடு;

திருவோணம் அருகே மோட்டாரை திருடியதாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோட்டார் திருட்டு

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது42) விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாய ஆயில் என்ஜின் மோட்டாரை வைத்திருந்தார். இந்த மோட்டாரை கடந்த மாதம் 16-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

விசாரணையில் பார்த்தசாரதிக்கு சொந்தமான ஆயில் என்ஜின் மோட்டாரை வலச்சேரிக்காடு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி (வயது28), ராமகிருஷ்ணபுரம் பூபாலன் (28) மற்றும் குகன், ஆனந்த் ஆகிய 4 பேரும் திருடி லோடு ஆட்டோவில் கடத்தி சென்று ஆயில் என்ஜின் மோட்டாரை பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராமமூர்த்தி, பூபாலன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இந்த திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள குகன், ஆனந்த் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்