தஞ்சாவூர்
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
|பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருவிடைமருதூர்,
பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் திருநாகேஸ்வரம் சோழபுரம் மற்றும் அய்யம்பேட்டை, சென்னை, கடலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது. மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.இந்தநிலையில் நேற்று மதியம் சென்னை சாலை களம்பரம் பிரிவு சாலையில் வந்த இருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை சோழசக்கரநல்லூர் ராஜா தெருவை சேர்ந்த அசரப்அலி மகன் ரசித்அலி(வயது26), ஏனங்குடியை சேர்ந்த ராஜ் மகன் நவநீதகிருஷ்ணன்(26) என தெரிய வந்தது.மேலும் இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என்பது தெரியவந்தது. ரசித்அலி, நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.