< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு; வாலிபா் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு; வாலிபா் கைது

தினத்தந்தி
|
19 July 2023 12:45 AM IST

முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக வாலிபா் கைது செய்யப்பட்டார்.

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்கரீம். இவருடைய மகன் தாஜிதீன்(வயது24). நேற்றுமுன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்பு பகுதியில் வசிக்கும் நிஜாம் மகன் முகமதுஅர்சாத்தை(20) பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமதுஅர்சாத் மற்றும் நூர்பள்ளி தெருவில் வசிக்கும் சேக் மகன் அப்பாஸ் ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமதுஅர்சாத்தை கைது செய்த போலீசார் அப்பாசை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்