< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

கடன் தொல்லையால் தாய்-மகன் தற்கொலை

தினத்தந்தி
|
3 Oct 2023 1:36 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடன் தொல்லையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்சேரி பகுதியில் வசித்து வந்தவர் கிளியம்மாள் (வயது 58). இவருடைய மகன் பால்பாண்டி(32). கொத்தனார். இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். இந்தநிலையில் நேற்று காலை நீண்டநேரமாக கிளியம்மாள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது கிளியம்மாளும், பால்பாண்டியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-பால்பாண்டி சொந்தமாக வீடு கட்டி கொண்டு இருக்கிறார். இதற்காக அவர் பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனவேதனை அடைந்த பால்பாண்டியும், கிளியம்மாளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்பாண்டியுடன் ஏற்பட்ட தகராறினால் அவருடைய மனைவி இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது.இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்