< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மது விற்ற தாய்-மகன் கைது
|26 Jun 2023 1:45 AM IST
மது விற்ற தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்
மலைக்கோட்டை:
திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் நேற்று மாலை இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்த மது பாட்டில்களை சாக்கு பையில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த வடக்கு தாராநல்லூர் கோழி பண்ணை பகுதியை சேர்ந்த சித்திரவேல் (வயது 30), அவரது தாய் குணவதி (50) ஆகிேயாரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.