< Back
மாநில செய்திகள்
2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி
மாநில செய்திகள்

2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
22 April 2023 1:37 AM IST

2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சமயபுரம்:

விஷம் குடித்தார்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி அழகு நகரை சேர்ந்தவர் விஜய்(வயது 26). இவர் ஒவ்வொரு ஊராக வாகனத்தில் சென்று பழங்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கல்பனா (வயது 23) என்ற மனைவியும், கவின் (6) என்ற மகனும், தனுஷியா (3) என்ற மகளும் உள்ளனர்.

விஜய் நேற்று வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று இருந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்பனா அரளி விதையை(விஷம்) அரைத்து குடித்துவிட்டு, வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

காரணம் என்ன?

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்பனா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்பனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்