பெரம்பலூர்
2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
|2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சத்யா (வயது 25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கனகராஜுக்கும், சத்யாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மனம் உடைந்த சத்யா வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் கனகராஜுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சத்யாவை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து மங்களமேடு போலீஸ் துைண சூப்பிரண்டு ஜனனிபிரியா மேல் விசாரணை நடத்தி, கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.