< Back
மாநில செய்திகள்
சேட்டை செய்த 3 வயது குழந்தையை குச்சியால் அடித்த தாய் - சுய நினைவை இழந்த குழந்தை உயிரிழப்பு
மாநில செய்திகள்

சேட்டை செய்த 3 வயது குழந்தையை குச்சியால் அடித்த தாய் - சுய நினைவை இழந்த குழந்தை உயிரிழப்பு

தினத்தந்தி
|
8 March 2023 2:23 PM IST

சேட்டை செய்த 3 வயது குழந்தையை குச்சியால் தாய் அடித்ததில், சுய நினைவை இழந்த குழந்தை, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், தாய் சரமாரியாக தாக்கியதில், சுய நினைவை இழந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ் - செல்வி தம்பதிக்கு, மணிகண்டன், சஞ்சனா, கிஷோர் என 3 குழந்தைகள் உள்ளன. 3 வயது குழந்தையான கிஷோர், வீட்டில் சேட்டை செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த தாய் செல்வி, குடிந்தையை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் சுய நினைவின்றி கீழே விழுந்த குழந்தையை, அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்