< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய்-மகள்
|25 July 2022 2:42 AM IST
ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய்-மகள்.
மதுரை,
மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி(வயது 47) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகள் பிறந்த பின்பு வளர்மதி, பி.ஏ. தமிழ் படித்துள்ளார். தற்போது இவருடைய மகள் சத்யபிரியா பிளஸ்-2 படித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதி உள்ளார். கடந்த முறை வளர்மதி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதி 160-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார். இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அரசு அறிவிப்பு வெளியான உடன் தாயும் மகளும் குரூப்-4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால் டிக்கெட் வந்தது. இதையடுத்து நேற்று அந்த மையத்தில் தாயும்-மகளும் குரூப்-4 தேர்வு எழுதினர்.