< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரெயில் முன் பாய்ந்து குழந்தைகளுடன் தாய் தற்கொலை
|27 Feb 2024 12:25 PM IST
குடும்ப தகராறு காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை,
வாலாஜா ரெயில் நிலையத்தில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் வெண்ணிலா (35) என்பதும் இவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெண் குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.