< Back
மாநில செய்திகள்
பாபநாசம் அருகே மகள்களுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
மாநில செய்திகள்

பாபநாசம் அருகே மகள்களுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

தினத்தந்தி
|
12 Feb 2024 9:39 AM IST

கும்பகோணம் அருகே ரெயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்,

பாபநாசம் அருகே உள்ள உத்தாணி ரெயில்வே கேட் குடமுற்று ஆற்றுப்பாலம் அருகில், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற விரைவு ரெயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தனது 11 வயது மற்றும் 9 வயது பெண் குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களின் உடல்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தது கும்பகோணம் பாரத் நகரை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது மகள்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோவையில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும், ஆர்த்தியின் கணவர் ராஜேஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தனது மகள்களுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்