< Back
மாநில செய்திகள்
நின்ற லாரி மீது கார் மோதி தாய்-மகன் பரிதாப சாவு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நின்ற லாரி மீது கார் மோதி தாய்-மகன் பரிதாப சாவு

தினத்தந்தி
|
20 May 2023 1:40 AM IST

நெல்லை அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் சிறுமி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் சிறுமி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

கோவில் நிகழ்ச்சி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அல்சூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ஷெட்டி. இவருடைய மனைவி பிரேமாதேவி (வயது 60). இவர்களின் மகன் ஸ்ரீகாந்த் (40).

இவர் தனது தாய் பிரேமாதேவி, மனைவி சசிகலா (34), மகள் தனுஸ்ரீ (5) ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து கேரளாவில் நடந்த கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் பெங்களூருக்கு புறப்பட்டார். காரை ஸ்ரீகாந்த் ஓட்டினார்.

தாய்-மகன் பலி

கார் நேற்று மதியம் நெல்லையை கடந்து கங்கைகொண்டான் வழியாக சென்று கொண்டு இருந்தது. அப்போது கங்கைகொண்டானில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சர்வீஸ் ரோட்டில் ஒரு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஸ்ரீகாந்த் ஓட்டிச்சென்ற கார், நின்ற லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஸ்ரீகாந்த் மற்றும் முன் இருக்கையில் இருந்த பிரேமாதேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுகுறித்து உடனடியாக கங்கைகொண்டான் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கங்கைகொண்டான் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதேநேரத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

2 பேருக்கு தீவிர சிகிச்சை

இடிபாடுகளுக்குள் சிக்கிய ஸ்ரீகாந்த், பிரேமாதேவி ஆகியோரின் உடலை மீட்டனர். மேலும் காரின் பின்இருக்கையில் இருந்த சசிகலா, தனுஸ்ரீ ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்